கோவை பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற மாநில அரசு பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற இதில், மாணவ,மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களினால் தீமைகளை எடுத்து கூறி துணிப்பைகளை உபயோகப்படுத்துவோம் எனவும், பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்பதோடு,முதல் கட்டமாக கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா பகுதயாக மாற்ற அனைவரும் முயற்சி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.