2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 47 லட்சம் ரூபாய் மதிப்பில் அகழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும் ஆய்வாளர்களும் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இதனிடையே தமிழகத்தில் ஆய்வு செய்திட வருடந்தோறும் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் 2019 – 2020 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் சிவகளை சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதன் அருகில் உள்ள இடங்கள் ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அகழ் ஆய்வு மேற்கொள்ள விரிவான கள ஆய்வு செய்யப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழந்தமிழரின் கடல்கடந்த வணிக தொடர்புகளை ஆய்வு செய்யும் வகையில் கடலில் தேசிய நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.