வைகோவை அவதூறு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோதும் அதிமுக வை உடைக்க முயற்சி செய்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வைகோ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் அது குறித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கருணாநிதி குற்றச்சாட்டுகளை அரசு முறையாக நிரூபிக்கவில்லை, எனக்கூறி வைகோவை விடுதலை செய்துள்ளார். பத்திரிக்கை செய்தியை தவிர வேறு எந்த ஆதாரங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறியவர் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




