ஐஎன்எஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தில் சிபிஐ காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல கேள்விகளை கேட்கவேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை ஏற்று காவல் ஆனது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான இரண்டு வழக்குகள் சிதம்பரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரவிருக்கின்றன. அமலாக்கத் துறையின் கைதுக்கு எதிராக முன்ஜாமீன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
சிபிஐ கைது செய்ததற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு என்பது வரும் திங்கள்கிழமை என்று உச்சநீதிமன்றத்தில் வரவேற்கக் கூடிய சூழ்நிலையில் அதனை காரணம் காட்டி அதற்கான காவலை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை நீட்டிக்க கூடாது என்றும் அப்படி நீட்டித்தால் தானாக முன்வந்து சிபிஐ காவலில் இருந்து கொள்கிறேன் என்றும், அவர்கள் என்னிடம் எந்த விசாரணையும் நடத்திக் கொள்ளட்டும் என்றும் ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய நாள் வரை மட்டுமே சிபிஐ காவலில் அனுப்ப வேண்டும் என்று முக்கியமான வாதத்தை முன்வைத்து இருக்கிறார்கள்.
அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது நீதிமன்றம் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அவரது சிபிஐ காவலை நீட்டித்து இருக்கின்றனர். மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள மூன்றாவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஒரு நாளைக்கு 400 கேள்விகள் கேட்கப்பட்டதாக சிபிஐ சார்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும் மேலும் பல கேள்விகளை கேட்கவேண்டும் என்ற வாதத்தை வைத்தனர். இதையும் கருத்தில் கொண்டு அவருக்கான காவல்நீட்டிப்பு என்பது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.






