கண்ணன் கோபிநாத்தின் பதவி ராஜினாமாவிற்கான விளக்கம்!

அரசு அதிகாரியாக பதவி வகித்துக் கொண்டே அரசை கேள்வி கேட்க முடியாது என்பதால் தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஐ‌ஏ‌எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

“காஷ்மீரில் இரு தொலைதூரத்தில் இருக்கும் ஒரு இடமாக மட்டுமே நாங்கள் பார்த்தோம் புரிந்து கொள்வதில்லை .எனவே அங்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம். எனவே அரசை கேள்வி கேட்டு பதில்களை பெறுவதைவிட அரசுடன் இணைந்துசெயல்படலாம் என முடிவெடுத்தேன். இது ஒரு ஊசி குத்துவது போன்றதுதான் குழந்தைக்கு வலித்தாலும் நன்மையானது என அரசு விளக்கம் அளிக்கிறது. ஊசி குத்தப்பட்ட ஒரு குழந்தை அழுவதற்கு கூட உரிமை இல்லையா இது எனக்கு தீவிரமாக தோன்றியதால் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.


Leave a Reply