எம்.பி. பாரிவேந்தர் முயற்சியால் சவுதிலிருந்து தமிழரின் உடல் தமிழ்நாடு வந்தடைந்தது

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் மேற்கொண்ட முயற்சியால் 4 மாதங்களாக சவுதியிலிருந்து தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பாரிவேந்தருக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

பெரம்பலூர் மாவட்டத்தை உட்பட்ட கந்தசாமி என்பவர் சவூதியில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு எப்படி எடுத்து வருவது என தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீரில் ஆழந்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 ம் தேதி இதுபற்றிய தகவலை அறிந்த பாரிவேந்தன் சவுதியில் இருக்கும் கந்தசாமியின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

 

மேலும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதன்காரணமாக கந்தசாமியின் உடல் சவுதியிலிருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பாரிவேந்தருக்கு கந்தசாமியின் குடும்பத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.


Leave a Reply