பழனியில் புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் பாரம்பரியமாக கடை நடத்தி வரும் சித்தநாதன் பஞ்சாமிர்தம் கடைகளில் வருமான வரி அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கடை உரிமையாளர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பஞ்சாமிர்தம் வாங்குபவர்களுக்கு விற்பனை ரசீதும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததால், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தநாதன், கந்த விலாஸ் பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களுக்கு பழனியில் திருமண மண்டபங்கள் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. மேலும் அங்கும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.