தர்மபுரி மாவட்டம் போதிய பேருந்து வசதி இன்மையால் பயணத்தை மேற்கொள்ள மாணவர்கள் மிகவும் சிரமத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாமரத்தை பள்ளம் பகுதியில் உள்ள அரசு பெரியார் பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
சுமார் 8 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளோடு கல்லூரி கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்ப போதிய பேருந்து வசதி இல்லை என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது. 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே ஒரு பேருந்தில் நம்பியிருக்கும் சூழலில் தொங்கியபடி ஆபத்தான சூழலில் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும், சில மணி நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் சென்றால் பெற்றோர்கள் அச்சப்படுவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.