நிலவின் சுற்றுவட்ட பாதையில் சாதனைப் பயணத்தை தொடரும் சந்திரயான்-2 விண்கலம் சவால்களை கடந்து விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல் களை எட்டும் வகையில் எந்த விண்கலமும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் விண்கலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன்-2 அடுத்த இரண்டாவது நாளே, அதாவது 22 ஆம் தேதி பணியிடத்தில் நிலவின் முதல் புகைப்படத்தை விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோவிற்கு பெருமை சேர்த்தது. தனது சாதனை பயணத்தை தொடரும் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ மட்டுமல்ல உலக விஞ்ஞானிகளை எதிர்பார்த்துள்ளனர்.
நிலவின் சம பரப்பில் சந்திராயன்-2 விண்கலம் தன்னுடைய இருவரில் தானாகவே இறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவிக்கிறார். சந்திராயன் 2 விண்கலம் அடுத்த கட்டமாக நாளை தன்னுடைய பயண வேகத்தை நான்காவது முறையாக மாற்றிக்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் ஏழாம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.