2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்?

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது ஏறக்குறைய நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வருடாந்த அறிக்கை நேற்று வெளியானது. அதில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

2018 ஆம் ஆண்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது முடிந்த நிதியாண்டின் 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. அதாவது 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

 

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது 69 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 15 கோடியே 10 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்ட நிலையில், தற்போது முடித்த நூற்றாண்டில் 4 கோடியே 70 லட்சம் ஓட்டுகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.

 

500 ரூபாய் கள்ள நோட்டுகள் மதிப்பு அதிர்ச்சி தரும் வகையில் 21 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது வங்கி முறைகேடு 23.8 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 2017 18 ஆம் நிதியாண்டில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய்க்கு நடைபெற்ற பங்கு முறைகேடு தற்போது முடிந்த நிதியாண்டில் 1542 கோடியாக அதிகரித்துள்ளது.


Leave a Reply