நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் !!!
நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாண வ,மாணவிகளுக்கான திறன் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகில் நவீன தொழில் நுட்பங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது உள்ள இளம் கல்வி மாணவ,மாணவியர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக மைண்ட் பாக்ஸ் நிறுவனத்தின் மூலமாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் மாணவ,மாணவிகளின் பன்முக திறைமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக அறிவு திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை கிக்கானி மேல் நிலைப்பள்ளியில் டிசைன் சேம்பியன்சேப் 2019 எனும் போட்டி மைண்ட் பாக்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. மூவி மேக்கீங்,கேம் டிசைன்,இண்டஸ்ட்ரியல் டிசைன்,கிராபிக்ஸ் டிசைன் எனும் தலைப்புகளில் இரண்டு பிரிவாக நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 464 குழுக்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

மும்பை ,ஹைதராபாத்,புனே என இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் இது போன்ற போட்டிகளில் சிறந்த திறனாய்வு ஆய்வுகள் தேர்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதாகவும்,தற்போது மாணவ மாணவிகளிடையே நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலங்களாக இது போன்ற திறன் போட்டிகள் நடத்தப் படுவதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




