--- --:--:-- --

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்து வைத்த பன்னீர்செல்வம்!

53425

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதனை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை இயங்கி வருகிறது.

 

அதனால் தமிழக முதல்வர் உத்தரவுப்படி, இன்று தமிழக பாசனத்திற்காக குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 14707 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலத்திற்கு பாசனத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான பூஜைகள் நடந்து முடிந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நீரை திறந்து விட்டார்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் தான் தமிழக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் இந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருந்தது.

 

இதனால் தமிழக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.தண்ணீரானது குமரி மலையிலிருந்து லோயர்கேம்ப் சென்றடைந்து. அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு சென்றடைய இருக்கிறது. இந்த நீர்திறப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon