அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
மக்களை சந்தித்து குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 20 மக்களவை உறுப்பினர்களும் 5 மாநிலங்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. முக்கியமாக மக்களை சந்தித்து குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தொகுதிக்கான திட்டங்கள் குறித்து பேசியதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும், எம்பிக்கள் அலுவலகங்கள் எப்பொழுதும் செயல்பட வேண்டும் என்றும், ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது மக்களின் கோரிக்கைகளை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




