மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோட்டில் சிலை வைக்க அனுமதி கோரிய மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு வந்தது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்காவில் முழு உருவச் சிலையை நிறுவ அனுமதி கோரிய மனுக்கள் நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டும்,அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மட்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். இதனை அடுத்த இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.