அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மருத்துவத்துறையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் பணிக்கு செல்லாமல் தங்களுடைய பணிகளை புறக்கணித்து மருத்துவமனையின் வாயிலின் முன்பு அமர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

அவர்கள் 4 கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

இன்று எந்த ஒரு நோயாளிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக எல்லா மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தகுந்த மருத்துவர்களை விட்டுவிட்டு தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ,தெரிவித்தனர் உயிரிழப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.


Leave a Reply