ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை பதிவு செய்திருக்கும் வழக்கில் கைது செய்ய தடை விதிக்கக்கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது அவரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நீட்டித்து உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பேய்கதைகள் எனவும் ஒருநாள் இது புதைந்து போகும் எனவும் அவரது குடும்பத்தார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சட்டவிரோதமாகப் பணம் நீட்ட வேண்டிய அவசியம் தனது குடும்பத்திற்கு இல்லை எனவும், தேவையான சொத்துக்கள் தங்களுக்கு இருப்பதாகவும் தவறான வழியில் பணம் சேர்க்க தங்களுக்கு அவசியமில்லை எனவும் சிதம்பரத்தின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். பல நாடுகளின் சொத்துக்கள் வங்கி கணக்குகள் போலி நிறுவனங்கள் இருப்பதாக வரும் தகவல்களால் தாங்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறைக்கப்பட்ட தாக கூறப்படும் வங்கி கணக்குகள் போலி நிறுவனங்கள் கணக்கில் காட்டாத சொத்து பற்றி ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்று பாஸ்கரன் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 50 ஆண்டுகால பொது வாழ்வில் நற்பெயரை கெடுக்க முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பேய் கதைகளே என்றும் அவை ஒருநாள் புதைந்து போகும் என்றும் சிதம்பரத்தின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.