முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக நாளை வெளிநாடு செல்கிறார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ,துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து நாளை காலை லண்டன் புறப்பட்டு செல்லும் அவர் இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுவது, மருத்துவத் துறை தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.

 

செப்டம்பர் 1 ஆம் தேதி லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் முதலமைச்சர் செப்டம்பர் 2 ஆம் தேதி அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

 

பயணத்தின் ஒரு பகுதியாக சான்பிரான்சிஸ்கோ, கலிபார்னிய ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் பயணிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் தொடங்க அவருக்கு அழைப்பு விடுக்கிறார்.

 

மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.


Leave a Reply