ப.சிதம்பரத்தின் காவல் 5 நாட்கள் நீட்டிப்பு! சி‌பி‌ஐ மனு ஏற்பு!

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தின் காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி சிபிஐ 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விசாரணை இன்றோடு முடிவடைந்து மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய சூழலில் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

5 நாட்களை தொடர்ந்து ப சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால் அந்த கோரிக்கையை ஏற்று சிபிஐ நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை வரை விசாரணை தொடரலாம் என அனுமதி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சிதம்பரம் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவு.

 

சிதம்பரம் நேரடியாக நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கே விசாரணை தொடரும் என்றும், வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எனவும் தெரியவருகிறது. அதற்கிடையே அவருக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் ஆகியோர் தினசரி 30 நிமிடத்திற்கு சந்திக்கலாம் என்று இரண்டு நிபந்தனைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தது.

 

அந்த நிபந்தனைகள் தொடரும் என தெரிகிறது ஆகவே சிதம்பரம் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து காவலில் இருக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.பொதுவாக ஒருவரை கைது செய்தால் இரண்டு வாரங்கள் அதாவது 14 நாட்கள் வரை விசாரணை நடத்தலாம் என விதி இருக்கிறது.


Leave a Reply