6 அடி உயரத்தில் புதிய அம்பேத்கர் சிலை!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று கூடி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று பிற்பகலில் சாலையில் நடந்து சென்ற அவர் மீது வேன் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் காவல்நிலையம் அருகே விபத்து ஏற்படுத்திய வேனை வழிமறித்து அதனை அடித்து நொறுக்கினர், மேலும் தீ வைத்து கொளுத்தினர். இதனை தடுக்க வந்த காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தீ வைத்து கொளுத்தப்பட்டதை அறிந்த மற்றொரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்கு திரும்பி வந்தனர்.

 

இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அம்பேத்கர் சிலையை ஒரு தரப்பினர் அடித்து உடைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவிதித்தனர்.

 

இதன் காரணமாக சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அதே இடத்தில் புதிய சிலையை காவல்துறையினர் நிறுவியுள்ளனர். 6 அடி உயரம் கொண்ட புதிய அம்பேத்கர் சிலை காவல்துறை சார்பில் இன்று அதிகாலை நிறுவப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.


Leave a Reply