6 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் கோவை பகுதியில் தஞ்சமடைந்து இருப்பதாக கூறும் நிலையில் , கடந்த மூன்று தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் நாளான இன்று கோவை நகரங்களின் முக்கிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கோவை ரயில் நிலையம் விமான நிலையம் மற்றும் முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் பெறுபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்துமே தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யப்படக் கூடிய அனைத்து இடங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையின் புறநகர்ப் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உட்பட கோவையில் வரக்கூடிய முக்கிய பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய அனைத்து வேலைகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.