முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது காலமாகி உள்ளார்.

 

எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட அவர் இருபது 10 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அதாவது வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார்.

 

அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அந்த மூச்சுத்திணறல் காரணமாக அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். பாஜகவில் இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி காலம் ஆகியுள்ளது கட்சிக்கு ஒரு பெரிய இழப்பு.

 

கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவின் உடைய குறிப்பாக மோடி அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் அருண் ஜெட்லி முக்கிய பங்கு வகித்து வந்தார்.அவருடைய உடல் அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.


Leave a Reply