பொருளாதாரம் மலிவடைந்து இருப்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் மந்தம் அடைந்திருப்பதை மத்திய அரசை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.பொருளாதாரத்திற்கு ஊக்கம் தர பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் வெளியிட்டார்.

 

இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மணிஷ் திவாரி இந்திய நிதித்துறை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருவதாக அமைச்சர் கூறியிருப்பது பொருளாதார நிலையை அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாகவும், மணிஷ் திவாரி குற்றம்சாட்டினார்.

 

நாட்டின் பொருளாதாரம் இப்படியிருக்கையில் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 3 கோடி பேர் வேலை இழக்கும் சூழல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Leave a Reply