டெட் இரண்டாம் தாளிலும் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித் தேர்வான இரண்டாம் தாள் தேர்வில் 1 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற டெட் தேர்வில் இரண்டாம் தாளை 3 லட்சத்து 79 ஆயிரத்து 833 ஆசிரியர்கள் எழுதி இருந்தனர்.

 

அதில் 300 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஜூன் இரண்டாம் தேதி நடைபெற்ற முதல் தாள் தேர்வு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிலும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

 

டெட் தேர்வில் இரண்டு தாள்களிலும் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 லட்சத்து 53 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர் அதில் 4.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

 

அதாவது 34 ஆயிரத்து 753 ஆசிரியர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் அடுத்த டெட் தேர்வில் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க இரண்டாம் தாளிலும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Leave a Reply