டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்கக் கோரி திமுக சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் தலைமையில் திமுக மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். காஷ்மீர் மக்களிடம் கருத்து கேட்காமல் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


Leave a Reply