முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். அதனடிப்படையில் இந்த திட்டமானது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 

தமிழகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு இருக்கக்கூடிய தமிழர்கள் உட்பட எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக வரக்கூடிய 28ஆம் தேதி 15 நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவர்களுடன் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் இந்த பயணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

 

இதற்கான ஆயத்தப் பணிகள் தயாராகிக் கொண்டிருக்க கூடிய நிலையில், அது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், செங்கோட்டையன், காமராஜ் ஆகிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்திருக்கிறார். முதலமைச்சர் உடைய பயணத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?, முதற்கட்டமாக யாரை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்பதற்கான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

வருகிற 28-ஆம் தேதி வெளிநாடு செல்லக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் 15 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் அவரை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.யாதும் ஊரே என்ற வாழ்வியல் கலை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த யாதும் ஊரே இந்த வலைதள அமைப்பு மூலமாக தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் பெரிய நிறுவனங்களில் இருக்கக்கூடிய தமிழர்கள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவான பொருட்களை அமைத்து தர இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் பல்வேறு தகவல்களை ஆலோசித்து கொள்ள இருக்கிறார்.


Leave a Reply