அத்தி வரதர் உற்சவத்தின் உண்டியலில் 9 கோடியே 90 லட்சம் காணிக்கை!

48 நாட்கள் நடந்த நடைபெற்ற அத்திவரதர் உற்சவத்தில் 9 கோடியே 90 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயில் உற்சவம் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது.

 

சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பின்னர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல்
நிறைவு நாள் வரை பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அருள் பாலித்தார்.இந்த நாட்களில் அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள 18 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இதில் தற்போது 13 உண்டியல்கள் எண்ணப்பட்டன. இவற்றில் 9 கோடியே 90 லட்சம் ரொக்கமும், 164 கிராம் தங்கம், 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் 5 உண்டியல்கள் விரைவில் எண்ணப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply