சுத்தியலால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் – காவல்துறையினரிடம் சரண்

கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜனை தவறுதலாக மகன் மோகன் குமார் (29) தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துள்ளார்.

 

தாய், தந்தை இருவருமே மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாத்திரை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாயை தாக்கிய தந்தை கோவிந்தராஜனை தடுக்க முற்பட்ட போது, தன்னையும் தாக்கிய தந்தையை தடுக்க அவசரத்தில் அருகிலிருந்த சுத்தியலால் காலில் அடித்துபோது தவறுதலாக சுத்தியல் தலையிலும் பட்டதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துள்ளார்.

தந்தை உயிரிழந்தது அறியாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினருக்கு தாமாகவே சம்பவத்தை கூறி மோகன்குமார் சரணடைந்தார்.

 

இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply