பொள்ளாச்சியில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்!வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை!
நியாவிலை கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து இன்று கள ஆய்வில் ஈடுபட்ட அவர் இருசக்கர வாகனத்தில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற நபரை பின் தொடர்ந்து பொள்ளாச்சி லாரி பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்.அப்போது, ராஜாமுகமது, சண்முகம், ஜக்காரியா என்பவர்களது கடைகளில் சோதனையிட்ட போது சுமார் ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர்,ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கேன்களை பறிமுதல் செய்த வருவாய் கோட்டாச்சியர், மேலும் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த மூவரது கடைகளுக்கும் சீல் வைத்ததோடு அவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அந்த மூவரிடமும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




