தினமும் லட்டு மட்டுமே கணவனுக்கு உணவு! விவாகரத்து! என்ன கொடுமை சார் இது

தினமும் லட்டு மட்டுமே உணவு, வெறுப்படைந்த கணவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படி ஏறி உள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மீரட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகினார்.

 

விவாகரத்துக்கான காரணத்தை கேட்டபோது தனக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் லட்டு மட்டுமே கொடுப்பதாகவும், அதற்கு இடைப்பட்ட நேரத்தில் வேறு எதுவுமே கொடுப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து, மனைவியிடம் விசாரணை செய்ததில் இரண்டு வேலைக்கு 8 லட்டுகள் மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவருக்கு நல்லது நடக்கும் என மாந்திரீகர் ஒருவர் கூறியதும் அதைக்கேட்டு சில மாதங்களாக கணவருக்கு லட்டு மட்டுமே கொடுத்து வந்ததும் தெரியவந்தது.


Leave a Reply