விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஆணழகன் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உலக அளவிலும் ஆசிய அளவிலும் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். அதனடிப்படையில் இந்த விருது வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இதற்கான அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கவில்லை என்றும், மத்திய அரசு அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது தனது உழைப்புக்கான கிடைத்த அங்கீகாரம் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.