12 நாட்களுக்குள் 10 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பியவர் கைது. பெண் ஒருவரின் செல்போனுக்கு 10 ஆயிரம் குறுஞ்செய்திகளை அனுப்பிய பிளோரிடாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின், பிளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிகோலஸ் சி. நெல்சன் என்பவர், தனது தோழி மூலம் அறிமுகமான பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் 12 நாட்களுக்குள் 10 ஆயிரம் குறுஞ்செய்திகளை வரை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் நிகோலஸ் அனுப்பியவற்றில் பல குறுஞ்செய்திகள் ஆபாசமானதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாம் ஒன்றாக மரணிப்போம், ஒன்றாக சென்று அமெரிக்காவில் உள்ள தேவாலயங்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவோம் என்பது போல குறுஞ்செய்தி அனுப்பி உள்ள அந்த நபர், அப்பெண்ணின் உறவினரின் வீடு முன்பு துணிகளையும் வீசிவிட்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிக்கோலஸ் இவ்வாறு செய்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.