என்றும் பசுமை பணியில் திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் ஓனர்ஸ் அசோசியேசன்!

திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவினாசியில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவு உள்ளசங்கமாங்குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை அவினாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட JCP கள் குளத்தை தூர்வார புறப்பட்டு சென்றது.

நமது மாவட்ட தலைவர் RTN.PHF.T.N துரை அவர்கள் இந்த நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் உடன் குளம் காக்கும் இயக்கத்தில் உள்ளவர்களும் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர் மேலும் குளத்தில் நடந்த சுதந்திர தின கொடி ஏற்று விழாவில் நமது மெஜஸ்டிக் கந்தசாமி அவர்கள் கொடியேற்றினார் மற்றும் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

வந்திருந்த அனைவருக்கும் நமது தலைவர் விதை பந்துகளை இலவசமாக வழங்கினார் இதன் மூலம் ஏராளமான மரங்கள் வளரும் மெஜஸ்டிக் கந்தசாமி பிரைம் டெக்ஸ் கோவிந்தசாமி நமது தலைவர் மற்றும் ஏராளமானோர் பொருளுதவி செய்தார்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் குளம் காக்கும் இயக்கம் சார்பாக பழனிச்சாமி மற்றும் மகேந்திரன் நன்றி கூறினார்கள்.என்றும் பசுமை பணியில் திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் ஓனர்ஸ் அசோசியேசன்


Leave a Reply