--- --:--:-- --

நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது!

abhinandan-varthaman-2-1565759935

டில்லியில் நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.பிப்., மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் 3வது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

 

அதே போன்று பிப்.,27 அன்று பாக்., எல்லைக்குள் சென்று பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

 

டில்லியில் நாளை நடக்கும் நாட்டின் 73 வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதும், பாலகோட் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய இந்திய விமானப்படை குழு தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon