வனிதாவைக் கூட நம்பிவிடலாம், புதிதாக வந்திருக்குது பாரு காக்கா: கிண்டலாக கூறிய கவின்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரி கடந்த வாரம் நுழைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளர் வனிதாவும் சென்றுள்ளார். அவரை போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியராக பணிவிடை செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வந்ததுமே, முகேன், அபிராமி இடையிலான காதலைப் பிரித்துவிட்டார் வனிதா. அவரது வாக்குவாதத்தால் வீட்டுக்குள் கடுமையான சண்டை நிகழ்ந்தது. அப்போது முகேனுக்கு ஆதரவாகப் பேச முயற்சித்தார் கஸ்தூரி. இருப்பினும் அவர் பிரச்சினையை வேறு விதமாகக் கொண்டு போக முயற்சிப்பதாக மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.

 

பிரச்சினை ஒரு வழியாக முடிந்த பின் முகேனிடம் கவின் பேசுகையில், “வனிதாவைக் கூட நம்பிவிடலாம், புதிதாக வந்திருக்குது பாரு காக்கா” என கஸ்தூரி பற்றி கிண்டலாகக் குறிப்பிட்டுப் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களைப் பற்றி பல சமயங்களில் மரியாதைக் குறைவுடன் குறிப்பிட்டுப் பேசுவதை கவின் வழக்கமாக வைத்திருக்கிறார்.சேரனைப் பற்றி பலமுறை கிண்டலாக அவரும், சாண்டியும் பேசியிருக்கிறார்கள். இப்போது அதில் கஸ்தூரியையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள்.


Leave a Reply