கோவையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான ’துல் ஹஜ்’ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்து கொண்டாடுவதை ’பக்ரீத்’ ஆகும் இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.இந்த திருநாளை அனைத்து பள்ளி வாசல்களில் இன்று தொழுகை முடிந்து உற்சாகமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை பூ மார்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் ஜமாத்தில் சிறப்பு தொழுகையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.