தேவேந்திர குல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் : பேராசிரியர் பேச்சிமுத்து

தேவேந்திர குல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி பொது பட்டியலில் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் பேராசிரியர் பேச்சிமுத்து பேட்டி.தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றமும், அதிகார மீட்சிக்கான முன்னெடுப்பு கருத்தரங்கு அனைத்து தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் நடந்தது. பிரபு வரவேற்றார். ராமகிருஷ்ணன் அறிமுகவுரை ஆற்றினார்.

கடல் கடந்த நாடுகளில் மள்ளர்களின் வரலாற்று தொன்மங்கள் அறிஞர் ஒரிசா பாலு, பட்டியல் வெளியேற்றமும், சமூக முன்னேற்றமும் குறித்து தமிழர் வரலாற்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பேச்சிமுத்து, தமிழ் இலக்கியங்களில் தேவேந்திரர்களின் பண்பாடு குறித்து பாமக ., பொதுச் செயலாளர் அறிஞர் வடிவேல் ராவணன், பொதுப் பட்டியலில் தேவேந்திரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழ் தேச மக்கள் கட்சி செந்தமிழ் குமரன், ஐந்திணையும் மருதம் – நெய்தல் அரசியலும் குறித்து தமிழக மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உரிமை மீட்பு களமும் – ஒற்றுமையும் பற்றி ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி பாண்டியன் ஆகியோர் பேசினர். பிச்சைகுமார் நன்றி கூறினார்.

தமிழர் வரலாற்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பேச்சிமுத்து கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி பொது பட்டியலில் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும், தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும், மண்ணை மலடாக்கும் சீமை கருவேல மரங்களை அடியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாயம் செய்ய உழவர்களுக்கு அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.


Leave a Reply