பிரதமர் மோடிக்கு பாரத் ரத்னா விருது வழங்கிட வேண்டும் என பா.ஜ. எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள், அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சரித்திர சாதனையாக இது கருதப்படுகிறது.இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் ராட்லம் லோக்சபா தொகுதி பா..ஜ. எம்.பி. குமான் சிங் தோமர் கூறியது, காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் துணிச்சலான இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. எவராலும் செய்ய முடியாதது.
பல்வேறு வெளிநாடுகள் மோடிக்கு உயரிய விருதினை வழங்கி கவுரவித்துள்ளன.காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டும் விதமாக இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்றார். இவரது கருத்தை ரவிகிஷண், பிரக்யாசிங் தாக்கூர், விஜய்குமார் துபே, விஷ்ணு தத் ஷர்மா உள்ளிட்ட சில பா.ஜ.எம்.பி.க்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.