திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 வெள்ளாடுகள் பலி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே உசில னகோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (49) இவரது 6 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வயல் காட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது தொண்டியில் இருந்து திருவெற்றியூர் செல்லும் உயர் மீன் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்தததில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.

மற்ற ஆடுகள் தப்பி பிழைத்தது பின்னர் இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மின்சாரத்தை சரி செய்தனர் இதனால் நான்கு மணி நேரத்துக்கு மேலாக தொண்டி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலியான ஆடுகளின் உரிமையாளர் முருகேசன் கோனேரிகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயவாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply