--- --:--:-- --

தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி புழக்கம்,13 பேர் கைது !22 ஆண்டிராய்டு போன்கள்,10 இரு சக்கர வாகனங்கள்,ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்!களத்தில் இறங்கிய எஸ்.பி.

Capture6

லாட்டரி சீட்டால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதால், அதனை தடை செய்து தமிழகம் முழுவதும், லாட்டரிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,ஆங்காங்கே லாட்டரிகள் விற்பனை என்பது நடைபெற்று வருகிறது. இதனை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இது ஒரு புறம் இருக்க கோவை மாவட்டம் அன்னூரில் அதிக அளவில் ஆன்லைன் லாட்டரிகள் விற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அன்னூர் அடுத்த செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அதில் ஆன்லைன் லாட்டரி விற்பதும் அங்கு லட்சக்கணக்கில் பணம் வைத்து லாட்டரிகள் வாங்குவதும் தெரியவந்தது.இதனையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார் அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும்,ஆன்லைன் லாட்டரி வாங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 10 டூவீலர்கள், மினி ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் கூறுகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை அங்கு சென்றதாகவும், ஆன்லைன் லாட்டரியில் ஈடுபட்டிருந்த துரைசாமி,ஜீவா,ரமேஷ்,நவீன்,செந்தில் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 எலக்ட்ரானிக் மெஷின்கள், 10 டூவீலர்கள் மற்றும் மினி ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தப்பி ஓடிய சுந்தர்ராஜ்,சாமிநாதன்,ஹரி,பிரபு மற்றும் கஜேந்திரன் உள்ளிட்ட 5 முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தெரிவித்தார்.

மேலும்,கோவை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட எஸ்.பி.சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் தற்போது நவீனமாகி ஆன்லைன் லாட்டரியாக விற்பனை நடைபெற்று வருவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon