திருவாடானையில் ஆடிபூரத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடி உற்சவ விழாவானது கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது ஒவ்வோர் நாளும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் கேடயங்களில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவாக தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பொது மக்களும் பக்தர்களும் தேர்வடம் பிடித்து இழுத்து திருவாடான 4 வீதிகளில் வலம் வந்து பின் நிலையை அடைந்தது.

அதன் பின்னர் அம்பாளய் தேரிலிருந்து இறக்கப்பட்டு தேர் சுற்றிவந்த பாதயை தடம் பார்க்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அம்மன் ஆலயத்திற்கு வந்த்டைந்தார். ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். வருகிற 5ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும்.


Leave a Reply