தர்ஷனும் ஷெரினும் ஒருவரை ஒருவர் காதலித்தால் கண்டிப்பாக நான் விட்டுக்கொடுத்து விடுவேன் என்று பிக் பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. காரணம் தர்ஷன்நேர்மையாக இருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம்போட்ட வனிதாவை ஒருநிமிடத்தில் ஆட்டம் காண வைத்ததும் தர்ஷன் தான்.
தர்ஷனுக்கு பிக் பாஸ் வீட்டின் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் லவ் புரோபோசல் வைக்க அதை மறுத்துவிட்டார். காரணம் மாடல் அழகி பட்டம் வென்ற சனம் ஷெட்டி தர்ஷனை காதலித்து வருவதுதான். இதை சனம் ஷெட்டியே உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் சனம் ஷெட்டி பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், தர்ஷன் – ஷெரின் நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எனக்கு கிராமத்து டாஸ்கில் தர்ஷன் ஷெரினுக்கு ஊட்டிவிட்டது. மடியில் உட்கார்ந்து பேசினது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. இதெல்லாம் நான் தர்ஷன்கிட்ட எதிர்பார்த்த விஷயங்கள். ஆனால் அது நடக்கல. நான் தர்ஷனை காதலிக்கிறேன். ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் சொல்லுறேன்னு சொல்லிருக்காரு. நான் அவரை தப்பு சொல்லல.
நம்மள மாதிரி அவங்க போன், டிவி, மூவிஸ், குடும்பம் என்று இல்ல. அதே முகங்கள திரும்ப திரும்ப பார்க்குறாங்க. அதனால கண்டிப்பாக இதுமாதிரி பீலிங்ஸ் வரத்தான் செய்யும். யாருக்கு எப்போ யார் மேல லவ் வரும் என்று சொல்லவே முடியாது. ஒருவேளை அவருக்கு ஷெரினை பிடிச்சி இருந்தா, அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணா நான் கண்டிப்பாக விட்டுக்கொடுத்துடுவேன்’ என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார் சனம் ஷெட்டி.