சிம்புவாக என்டர்டெயின்மெண்ட் செய்யும் சாண்டி ! மன்மதன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநர் சாண்டி, நடிகர் சிம்புவை இமிடேட் செய்து ஹவுஸ் மேட்ஸ்களை மட்டுமல்லாது நம்மையும் கலகலப்பாக்கி வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால் ஹவுஸ்மேட்ஸ்கள் மன வருத்தத்தில் இருந்தனர்.

 

அதனை மாற்றும் வகையில் எம்ஜிஆரை போல் வேடமிட்டு கலகலப்பாக்கினார் சாண்டி. இதனை ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக ரசித்தனர்.இன்றைய புரோமோவின்படி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் ஒவ்வொரு நடிகரின் கெட்டப்பை கொடுத்துள்ளார். அதன்படி சரவணன் விஜயகாந்தை போலவும், சாண்டி சிம்புவை போலவும் லாஸ்லியா திரிஷா போலவும் வலம் வருகின்றனர்.

 

இந்த கெட்டப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாண்டி, சிம்புவை போல் பேசி, நடனமாடி அசத்தி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்றும் சாண்டியால் பிக்பாஸ் வீட்டில் நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கு என இப்போதே குஷியாகி, டிவி முன் உட்கார துவங்கிவிட்டனர்.


Leave a Reply