சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் செயல்படவில்லை… பயணிகள் கடும் அவதி..!!

Publish by: சஃபியுல்லா --- Photo :


சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் சென்றுவர வசதியாக தானியங்கி நகரும் படிக்கட்டு வேலை செய்யாததால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மற்ற பிளாட் பாரங்களுக்கு செல்ல முடியாமல், லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு செல்வதால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தனியார் பராமரிப்பில் உள்ள(எஸ்கலேட்டர்) எனப்படும் நகரும் படிக்கட்டை சீரமைக்கும் பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. நாள்தோறும் இதனை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த படிக்கட்டு செயல்படாததால், குறிப்பாக வயதானவர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 

ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சந்தித்து வரும் இடர்களை கருத்தில் கொண்டு, இந்த நகரும் படிக்கட்டு உடனடியாக இயக்க செய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


Leave a Reply