திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – உதவி ஆணையர் நவீன் குமார் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு முன்னெச்செரிக்கை குறித்து பல்வேறு விழிப்ப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போக்குவரத்து மற்றும் கிரிமினல் குற்றங்கள் குறித்து விழிபுணர்வு நிகழ்சிகள் திருப்பூர் சுகுமார் நகர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாநகர காவல் தெற்கு உதவி ஆணையர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் பிரகாக்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்சியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்தும் உதவி ஆணையர் நவீன்குமார் விரிவாக எடுத்துறைத்தார். இறுதியாக மாணவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க விளையாட்டு கருவிகளை மாணவர்களுக்கு வழங்கினார். காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.