ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5 எஸ் ஒழுங்குமுறையினை பயன்படுத்துவது குறித்து 2வது தேசிய ஜவுளித்துறை மாநாடு

கோவையில் ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5எஸ் ஒழுங்குமுறை பயன்படுத்துவது குறித்து 2வது தேசிய ஜவுளித்துறை மாநாடு நடைபெற்றது.இந்திய தரவட்ட மன்றம் மற்றும் இந்திய டெக்சிபிரனர்ஸ் கூட்டமைப்பு இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2வது தேசிய ஜவுளித்துறை மாநாட்டை இன்று நடத்தியது.

 

இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் இந்திய தரவட்ட மன்றத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீவத்சா மற்றும் கோவை கிளையின் தலைவர் மோகனசுந்தரி,மாநாட்டை துவக்கி வைத்தனர்.இந்த மாநாட்டில் ஜவுளி தொழிற்சாலை ,தொழிலாளர்களுகிடையே 5 எஸ் மற்றும் தர வட்ட கொள்கையை மேம்படுத்துவது குறித்து நடைபெற்றது.

மாநாட்டில் சிறந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள், நிலையான உற்பத்தி,அதிக உற்பத்தி தொழில்நுட்பம் ,வீணாவதை குறைத்தல்,அதிநவீன தொழில்நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மும்பை டப்பாவாலக்கள் செயல்படும் விதத்தில் சர்வதேச அளவில் கடைபிடித்த 6 சிக்மா ஒழுங்குமுறைக்கு கிடைத்த விருதுகள், தொழிநுட்பம் இல்லாமல் மனிதனே கையாளும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து 2வது தேசிய ஜவுளித்துறை புத்தகத்தை வெளியிட்டனர். இதில் 150 ஜவுளித்தொழிற்சாலைகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.


Leave a Reply