--- --:--:-- --

டிக் டாக் வீடியோ பதிவு செய்யும் போது ஏரியில் மூழ்கி மாணவி பரிதாப பலி

35935b78-6ecc-45f7-879b-dfbacc3a8e9f

கர்நாடாக மாநிலத்திலுள்ள கொலர் மாவட்டத்தில் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் அருகே உள்ள ஏரிக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மாலா சென்றுள்ளார். அப்போது ஏரியின் அருகே ஆர்வமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியின் சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஏரியில் டிக்-டாக் வீடியோ எடுத்துக்கொண்டே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டிக்-டாக் வீடியோ எடுக்கும் போது கர்நாடகாவில் ஒரே மாதத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தெலங்கானா மாநிலத்தில் ஒரு இளைஞர் ஏரியில் டிக்-டாக் வீடியோ செய்யும்போது நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon