நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் கொலையா?

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்று கேரள சிறைத்துறை டி‌ஜி‌பி ரிஜிராஜ் சிங் கூறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் புகழ் பெற்ற முன்னாள் தடயவியல் துறை நிபுணரான டாக்டர் உமாடாதன் அண்மையில் உயிர் இழந்தார்.புகழ் பெற்று விளங்கிய தடயவியல் துறை நிபுணர் உமாடாதன் தன்னிடம் ஸ்ரீதேவி மரணம் பற்றி பேசியதை மேற்கோள் காட்டி கேரள சிறைத்துறை டி‌ஜி‌பி ரிஜிராஜ் சிங் மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை தீட்டி உள்ளார்.

 

அதில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஸ்ரீதேவி குளியலறையில் பாத் டாப்பில் மூழ்கி உயிரிழந்தார் என கூறப்பட்டதாகவும், அவ்வாறு மூழ்கி அவர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இல்லை என உமாநாடன் தன்னிடம் கூறியதாகவும் டி‌ஜி‌பி ரிஜிராஜ் சிங் தெரிவித்து இருக்கிறார். வெறும் 1 அடி தண்ணீர் மட்டுமே அந்த பாத் டப்பில் இருந்ததால் வேறு ஒருவர் ஸ்ரீ தேவியின் தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தான் தவிர அவர் உயிர் இழந்து இருக்க வாய்ப்பில்லை என தடயவியல் நிபுணர் உமாநாடன் சுட்டிகாட்டியதாகவும், கேரள சிறைத்துறை டி‌ஜி‌பி ரிஜிராஜ் சிங் கூறியுள்ளார்.


Leave a Reply