குறைந்தபட்ச கூலியை மணிக்கு 15 டாலர் என உயர்த்தும் மசோதா

அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 500 ரூபாய் என்ற அளவில் உள்ள குறைந்தபட்ச கூலியை 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அப்படி உயர்த்தப்பட்டால் ஒரு கோடியே 70 லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயரும். அதே வேளையில் 13 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளன. மணிக்கு 15 டாலர்கள் என குறைந்தபட்ச கூலியை 2024 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக உயர்த்த ஜனநாயக கட்சியினர் மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

 

தற்போது உள்ள குறைந்தபட்ச கூலியை இரு மடங்காக உயர்த்துவது, தொழிலாளர்களை வறுமை கோட்டிற்கு மேல் உயர்த்தி பொருளாதார வளர்ச்சியை முடக்க விட முடியும் என்பது ஜனநாயக கட்சியினரின் வாதம். ஆனால் இது வேலை வாய்ப்புகளை குறைத்து விலை உயர்வுக்கு வழிவகுத்துவிடும் என்பது குடியரசு கட்சியினரின் வாதம் ஆகும். இந்நிலையில் மணிக்கு 15 டாலர்கள் என குறைந்த பட்ச கூலி உயர்த்தப்பட்டால் 1 கோடியே 70 லட்சம் பணியாளர்கள் சம்பளம் உயரும் என்றும்,13 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் நாடாளுமன்ற பட்ஜட் அலுவலகம் கணித்துள்ளது.

 

குறைந்த பட்ச கூலியை உயர்த்துவது, வணிக வருவாய் குறைவதற்கும், தொழிலாளர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை நுகர்வோர் தலையிலேயே நிறுவனங்கள் செலுத்தும் என்பதால் பொருட்களின் விலை உயரும் என்றும், பட்ஜட் அலுவலகம் கூறியுள்ளது. இது தேசிய அளவில் உற்பத்தியை சிறிது அளவு குறைத்து விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply