சிம்புவின் 35 ஆண்டு திரையுலகப் பயணம் … 500 அடி போஸ்டர் அடித்த ரசிகர்கள்

நடிகர் சிம்பு திரை உலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆனதையொட்டி மதுரையில் 500 அடி நீளத்திற்கு வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. தன்னுடைய தந்தையான டி. ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி என்ற திரைப்படத்தில் ஒரு வயது குழந்தையாக அறிமுகமானார் சிம்பு என்று அழைக்கபடும் சிலம்பரசன். வெள்ளித்திரையில் அவர் கால் பதித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தள்ளாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட சுவரொட்டியை அவர்களுடைய ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.


Leave a Reply