சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷேக் ஸுலைமான் பின் அப்துல் அஸீஸ் ராஜிஹி சமீபத்தில் 97 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.உலக கோடீஸ்வரர் தரப்படுத்தலில் 120 வது இடத்தைப் பெற்றவர். கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகப் பெரிய பேரீத்தம் மரத்தோட்டத்தின் சொந்தக்காரர் இவர்தான்.
அதில் 2 லட்சம் மரங்கள் உள்ளன. அவருக்கு விருப்பமான அத்தோட்டத்தை அல்லாஹ்வுக்காக வக்பு செய்துள்ளார். அறுவடையில் கிடைக்கும் உயர் ரக பேரீத்தம் பழங்கள் புனித நகரங்களான மக்கா, மதீனா மற்றும் உலக நாடுகளுக்கு ரமழான் மாதத்தில் நோம்பு திறப்பதற்காக இலவசமாக விநியோகிக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.